Jan 14, 2011

பொங்கலோ பொங்கல் - சும்மா அதிருதுங்க!! :))

இந்தப் பொங்கல்ல இருந்து ஒலியில பல நல்ல புதிய மாற்றங்கள் வர இருக்கு.. அப்ப இது வரைக்கும் வந்ததெல்லாம் சரியில்லையான்னு கேட்டீங்கன்னா.. நான் அழுதுடுவேன்.. :)) ஏன் நல்ல மாற்றம்ன்னு நான் சொன்னதுக்கு உள்காரணம் இருக்கு,. அதை இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே தெரிஞ்சிக்குவீங்க..

கொஞ்ச நாளாக.. என் குரலை வானொலியில கேட்டிருப்பீங்க. ஆனா.. ஏன் நிகழ்ச்சி ஒன்னும் படைக்கலைன்னு கேட்டு மின்னஞ்சல் குவிஞ்சிருச்சு.. நல்ல சேதிதான்!! "எனக்கில்ல".. ஒலிக்கு!! :P

ஒலியின் புத்தம் புதிய இணையதளம் இந்த பொங்கல்ல இருந்து வெளியாக இருக்கு!! அதற்கான வேலையிலதான் ராத்திரி பகலா.. விமலா உழைச்சா.. (இது கொஞ்சம் ஓவர்தான்)
இது முதல் நல்ல மாற்றம்! ரொம்ப நாளுக்குப் பிறகு புது தளத்துல ஒலி நிகழ்ச்சிகளைப் பற்றியும் ஒலி படைப்பாளர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கு.
 
ஆ.. இன்னுமொறு நல்ல செய்தி என்னன்னா?? விமலா.. நல்ல்ல்லா தூங்கப் போறா!!

ஆமாங்க.. ஒரு வருஷமா காலையில 6 மணியிலிருந்து 10 மணிவரைக்கும் நிகழ்ச்சியைப் படைச்சி.. தூக்கம் போச்சு.. ஏன்னா.. நான் ஒரு night bird!
அதுனால, தூக்கம் பத்தாம இருந்தேன்.. இப்ப காலையில 10 மணி வேலை!! ஹாய் ஜாலி!!

மூன்றாவது நல்ல விஷயம் - ஒலி படைப்பாளர்கள் இப்ப இருந்து வலைபதிவுகள்ள அவுங்க கிறுக்கல்களை எல்லாம் பதிவு செய்யப்போறாங்க.. நானும் கூடத்தான் புது தளத்துக்கு http://blogs.mediacorpradio.sg/vimala/ என்னோட http://www.davimcicode.blogspot.com/ பக்கத்தைக் கொண்டுப் போக வேண்டி இருக்கு.
அதுனால.. இது post இந்த இடத்துல என்னோட இறுதி பதிவாக அமையப் போகுது..  இது எனக்கு கொஞ்சம் சோகமான செய்தி. என்னா.. இவ்வளவு நாளு இந்தப் பக்கத்துல இருந்த - davimciன்னு தனிப்பட்ட ஒரு touch போயிடுமே!! இருந்தாலும்.. மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி நானும் மாறனும் தானே!!

இன்னும் கொஞ்ச நேரத்துல நான் கெளம்பியாகனும். Dont be jealous ah!!நான் இப்ப
Shah Rukh Khan, Akshay Kumar, Aishwarya Rai Bachchan, Priyanka Chopra, Arjun Rampal, Deepika Padukoneனை Zee Awards Press Meetல பார்க்கப் போறேன். இவுங்க எல்லாரும் வருவாங்களான்னு தெரியல.. பார்த்தா நீங்க ரொம்ப கேட்டதா சொன்னீங்கன்னு சொல்றேன்..


ஞாயிற்றுக்கிழமை இன்னுமொறு பிரபலத்தைப் பேட்டி எடுக்கப் போறேன். அந்த சிறுத்தையைப் பார்த்துட்டு வந்து கதையைச் சொல்றேன்...

இவ்வளவு ஹோட் ஹோட் ஹோட்டான் விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும் போது என் பொங்கல் சும்மா அதிருதுங்க!! :))

Nov 29, 2010

தமன்னா வீட்டுல மின்சாரக் கட்டணும் ரொம்ப குறைவாம். ஏன்னா..




நேற்று Singtel தமன்னா கலைநிகழ்ச்சி கல்சாவுக்கு அருகிலிருக்கும் திறந்த வெளியில் நடந்தது. (அப்படி ஒரு புல் திடல் இருப்பதை முதல் முதலாக நேற்றுதான் கவனித்தேன்)... ஒலி நேயர்கள் பலர் தமன்னாவை நேர்ல பார்க்க ரொம்ப ஆர்வத்தோடு வந்திருந்தாங்க.. தமன்னா.. நேர்ல இன்னும் ரொம்ப அழகாக இருந்தாங்க. அதே மாதிரி பங்களாதேஷ் நடிகை பூர்ணிமா என்பவரும் வந்திருந்தாங்க...அவுங்களும் ரொம்ப அழகாக இருந்தாங்க.

நிகழ்ச்சி தொடங்குவத்ற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர்.. திடீர்ன்னு கூட்டத்தில் பெரிய சலசலப்பு.. என்னான்னு எட்டிப்பார்த்தா ஒரு ஸ்போர் லைட் அப்படியே நடந்து வந்தது போல தூரத்திலிருந்து தெரிஞ்சது.. பார்த்தா.. அட!! நம்ம தமன்னாதான்.. பளிச்சுன்னு அப்படியொரு நிறம்..
அதன் பிறகு அவுங்களைச் சந்தித்துப் பேசியன போது.. ரொம்ப கனிவாகவும் அன்பாகவும் பேசினாங்க.. கேள்வி பதில் அங்கத்துல என்ன வேணும்னாலும் கேளுங்க.. அப்பறம் பார்த்துக்கலாம்ன்னு உற்சாகமாகப் பேசினாங்க..

சிந்தி பெண்ணான தமன்னா நான் எதிர்பார்த்ததை விட ரொம்பவே நல்லா தமிழ் பேசினாங்க.. தமிழ் பேசத் தெரிஞ்சும் தெரியாத மாதிரி தமிழ் பேசுறவங்களே.. இனிமேலாவது திருந்துங்கப்பா..

தமன்னா ரொம்ப இனிமையாக, அன்பாக, professional லாக நடந்துக்கிட்டாங்க. அவுங்களோட நடை, உடை, பாவனையிலேயே இவுங்க சும்மா பொழுதுபோக்குக்காக நடிக்க வரலன்னு தெரிஞ்சது. கடின உழைப்பு, அதற்குத் தேவையான திறமைகளையும் கற்றுக்கிட்டுதான் வந்திருக்காங்கன்னு தெரியுது. அதனாலேயே இந்த சிலை தமிழ் தெலுங்கு திரையுலகை ஒரு கலக்கு கலக்கும்ன்னு நிச்சயமாகச் சொல்லலாம்.

தமன்னாவுக்கு எப்போ கல்யாணம்? கேள்வியோடு ரஃபி.. இப்போ இல்ல.. நான் இன்னும் சின்ன பொண்ணு என்ற பதிலோடு தமன்னா..

தமன்னா கிட்ட propose செய்யக் காத்திருந்த ரசிகர்களைச் சந்திக்கிறதுக்கு முன்னால... தமன்னாவுடைய கனவுக் கண்ணன், எப்படி இருக்கனும்ன்னு நான் கேட்டக் கேள்விக்கு... நல்ல மனசுதான் ரொம்ப முக்கியம் என்று பதில் சொன்னாங்க தமன்னா.. நல்லவங்களே.. முயற்சி செஞ்சுப் பாருங்கப்பா.. :)


 தமன்னா வீட்டுல மின்சாரக் கட்டணும் ரொம்ப குறைவாம்.
ஏன் தெரியுமா?
அதான் வெளிச்சத்துக்கு தமன்னா இருக்காங்களே!!




Oct 16, 2010

எழுதுங�

எழுதுங்கள் விமலா என்றார் பிரபலமான நண்பர். 'விம்ஸ் குண்டக்க மண்டக்க' எதைப் பத்தி எழுதலாம்?

Sep 30, 2010

For more details on Enthiren movie screening..

01 one of my fav Enthiren still 01















Golden Theatre
www.ayngaran.com
6295 6417


Rex
6337 6607
6337 2845


Golden Village
www.gv.com.sg
1900 – 912 – 1234


Cathay
www.cathay.com.sg
6235 1155

Sep 29, 2010

Enthiren Latest News...

Enthiren will be shown at Golden Theatre 1 & 2, Rex Theatre 1,2 & 3, Cathay Orchard Cineleisure, Cathay Causeway Point (Woodlands), Cathay Downtown East (Pasir Ris), Cathay AMK Hub, Cathay Jurong Point, Cathay Tiong Bahru, Cathay Bishan, Cathay Tampines. $15 @ all locations except Rex $17.

Sep 25, 2010

Enthiran

Guys... Do listen to my Ahaa Asathal Kaalai programme on monday 6-10am. I'll be giving out details on how to pre-book Enthiran movie tickets & Enthiren Movie Opening Special :)